Tuesday, October 20, 2009

அக்னி அஸ்திரம்



கோமியம் 20 கிலோ
புகையிலை 1 கிலோ
பச்சை மிளகாய் 2 கிலோ
வெள்ளைப்பூண்டு 1 கிலோ
வேப்பிலை 5 கிலோ

இவை அனைத்தையும் மண் பானையில் (வேறு பாத்திரங்கள் பயன்டுத்த கூடாது, வேதியியல் மாற்றங்கள் ஏற்ப்பட்டு அக்னி அஸ்திரம் பலிமிழக்கக்கூடும்.)

வைத்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

நன்றாக 5 முறை மீண்டும் மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும். இறக்கி வைத்து மண்பானையின் வாயில் துணியை வேடுகட்டி 2 நாட்கள் அப்படியே வைத்து விடவேண்டும். நீரின் மேல் ஒரு ஏடு போல் ஆடை படியும்.

அதை நீக்கி விட்டால் உள்ளே இருக்கும் தெளிந்த நீர்தான் அக்னி அஸ்திரம்.

100 லிட்டர் நீரில் இரண்டரை லிட்டர் அக்னி அஸ்திரம் 3 லிட்டர் கோமியம் கலந்து பயிர்கள் மேல் தெளித்தால் போதும் புழு பூச்சிகள் காணாமல் போய்விடும்.



3 comments:

velji said...

நன்றி!
என்னைப்போன்றவர்கள் நேரிடையாக பயன்படுத்த முடியாதெனினும் தகவலை தேவையானவர்களுக்கு சொல்ல வாய்ப்புள்ளது.
தொட்ருங்கள்!

விஜய் said...

நன்றி வேல்ஜி

Thenammai Lakshmanan said...

இயற்கை விவசாயம் அருமையாக இருக்கு விஜய்

அக்கினி அஸ்திரம் ரொம்ப புதுசு எனக்கு

தோட்டம் இருந்த வீட்டில் இதையெல்லம் அறியவில்லை நான்